ஆசிரியர் உதவியுடன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்


ஆசிரியர் உதவியுடன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்
x

ஆசிரியர் உதவியுடன் 10-ம் வகுப்பு தேர்வினை மாணவன் எழுதினான்.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவன் சதீஷ்பாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் எதிர்பாராமல் தவறி விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாணவன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தான் தேர்வுக்கு தயாராக இருக்கும் நிலையில் தனக்கு ஒரு உதவியாளாரை வைத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் சிவகாசியில் உள்ள ஒரு மையத்தில் மாணவன் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகளை செய்தனர். இதுகுறித்து மாணவன் சதீஷ்பாண்டி கூறியதாவது:- எதிர்பாராமல் நடந்த சம்பவத்தில் எனது வலது கையில் முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை நடந்த நிலையில் என்னால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுமோ என அஞ்சினேன். ஆனால் மாவட்ட கல்வித்துறை நான் தனிஅறையில் தேர்வு எழுத தேவையான நடவடிக்கை எடுத்தது. கேள்விதாளில் இருந்த கேள்விகளை படித்து பார்த்த நான் அதற்குரிய பதில்களை கூறினேன். அதனை ஆசிரியர் எழுதினார். நான் தேர்வில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. இதற்கு துணை புரிந்த முதல்-அமைச்சரும், கல்வி அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது சிவகாசி கல்வி மாவட்டத்தில் 63 மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இதில் 118 பேர் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுதி உள்ளனர் என்றார்.


Next Story