பள்ளியில் குரங்கு நுழைந்ததால் அலறி ஓடிய மாணவி காயம்


பள்ளியில் குரங்கு நுழைந்ததால் அலறி ஓடிய மாணவி காயம்
x

பள்ளியில் குரங்கு நுழைந்ததால் அலறி ஓடிய மாணவி காயம் அடைந்தார்.

வேலூர்

அணைக்கட்டு

பள்ளியில் குரங்கு நுழைந்ததால் அலறி ஓடிய மாணவி காயம் அடைந்தார்.

பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் குரங்குகளும் வசித்து வருகின்றன. அதோடு, மரங்களில் இருந்து பள்ளி வளாகத்தில் நுழையும் குரங்குகள், தங்களின் உணவு தேவைக்காக மாணவிகள் மதியம் கொண்டு வரும் உணவினை பறித்துச்சென்று விடுகின்றன.

இந்த நிலையில், பள்ளி வகுப்பறையில் நேற்று காலையில் நடந்த காலாண்டு தேர்வில், 7-ம் வகுப்பு மாணவிகள் சமூக அறிவியல் பாடத் தேர்வை எழுதிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வகுப்பறையில் குரங்குகள் நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். அந்தநேரம், ஒரு மாணவி அலறியபடி சென்றபோது, ஜன்னல் கம்பி தலையில் குத்தியதில் ரத்தம் கொட்டியது. உடனே, பள்ளி தரப்பில் மாணவியை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பள்ளி வளாகத்தில் குரங்குகளின் நடமாட்டத்தால், மாணவிகளின் கல்வி பாதிப்புக்கு உள்ளாவதோடு அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.

ஆகையால், இதனை கருத்தில் கொண்டு, அந்த பகுதியில் உள்ள குரங்குகளை வனத்துறை மூலமாக பிடிப்பதற்கு, கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story