பள்ளி சுற்றுசுவர் விழுந்து மாணவன் காயம்


பள்ளி சுற்றுசுவர் விழுந்து மாணவன் காயம்
x

கலவை அருகே பள்ளி சுற்றுசுவர் விழுந்து மாணவன் காயம் அடைந்தான்.

ராணிப்பேட்டை

கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 70-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தனிநபர் பிரச்சினை காரணமாக இடிக்காமல் விடப்பட்ட சுற்றுசுவர், தொடர் மழையில் சேதமடைந்துள்ளது. இதனை அகற்றுவதற்கு கடந்த 9 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவன் பூவண்ணன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது ்வன் மீது சுற்றுச்சுவர் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியை கோமதி, ஆகியோர் மாணவனை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது வட்டார கல்வி அலுவலர் திடீரென ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவதோடு, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story