121 அடி நீள கதர் துணியில் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரைந்த மாணவி


121 அடி நீள கதர் துணியில் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரைந்த மாணவி
x

நெல்லையில் 121 அடி நீள கதர் துணியில் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை மாணவி ஒருவர் ஓவியமாக வரைந்தார்.

திருநெல்வேலி

நெல்லை சிவராம் கலைக்கூட மாணவியும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவியுமான சிவ ஹரிணி 8 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி பெற்று வருகிறார். இன்று (சனிக்கிழமை) பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் கொண்டாடப்படுவதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை 121 அடி நீள கதர் துணியில் பல்வேறு ஓவியங்களாக சிவஹரிணி வரைந்து அசத்தினார். அதனை இறுதி செய்து காட்சிபடுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை வ.உ.சி. அரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஓவிய ஆசிரியர்கள் சிவராம கிருஷ்ணன், கணேசன், மகாராஜன், நல்நூலகர் முத்துகிருஷ்ணன், ஆசிரியர் ஜமால், எழுத்தாளர் நாறும்பூநாதன், டாக்டர் பிரேமச்சந்திரன், கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டு மாணவியின் முயற்சியை பாராட்டினார்கள். நிகழ்சிக்கு வந்தவர்களை மாணவியின் பெற்றோர் செந்தில்குமார் -ராஜலட்சுமி வரவேற்றனர்.


Next Story