3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு
ராணிப்பேட்டையில் 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சேமிப்பு கிடங்கில் குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி இந்த சேமிப்பு கிடங்கில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தின் அடிப்படையில் தனியார் துறை நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை வாடகையின் அடிப்படையில் சேமித்து வைத்துக்கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் ஏற்கனவே 16,016 மெட்ரிக் டன், 950 மெட்ரிக் டன், 834 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் செயல்பாட்டில் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் வசந்த், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி, கிடங்கு மேலாளர் சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.