மழை வேண்டி சிறப்பு யாகம்
மழை வேண்டி சிறப்பு யாகம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, நெகமம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாகி வருகிறது. ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, தற்போது ஜூலை மாதம் தொடங்கியும் சரிவர பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கினால், ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும். ஆனால் மழை சரிவர பெய்யாததால் அணை பகுதியில் தண்ணீர் குறைந்து பாறை முகடுகளாகவே காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் விவசாயிகள் மழை பெய்ய வேண்டி ஆழியாறு அணை மீது உள்ள விநாயகர் கோவிலில் கணபதி யாகம் உள்பட சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஆழியார் அணை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story