வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்நாளை நடக்கிறது
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலினை 100 சதவீத தூய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அச்சமயம் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக தங்கள் வீட்டிற்கே வந்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் NVSP Portal, மற்றும் voter helpline mobile app மூலமாக இணைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.