மோட்டார் சைக்கிளில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
மோட்டார் சைக்கிளில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை
இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது பெட்டிக்கடையின் வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அந்த பாம்பை அடிக்க முற்பட்டபோது அடுத்தடுத்து நின்ற மோட்டார் சைக்கிளில் புகுந்து போக்கு காட்டியது. பின்னர் கடைசியாக ஒரு மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு அங்கிருத்து தப்பி சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story