கழிவுநீர் தொட்டியில் கிடந்த எலும்புக்கூடு-போலீசார் விசாரணை


கழிவுநீர் தொட்டியில் கிடந்த எலும்புக்கூடு-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:30 AM IST (Updated: 5 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே கழிவுநீர் தொட்டியில் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராமம் சுண்டகாட்டு தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தார். தற்போது யாருக்கேனும் வாடகைக்கு விடுவதற்காக வீட்டை சுத்தம் செய்து புதுப்பித்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை திறந்த போது, அங்கு மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு லட்சுமணன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இலத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை சூப்பிரண்டு நாகசங்கர், இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கழிவுநீர் ெதாட்டியில் கிடந்த எலும்புக்கூடுகளை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தது ஆணா, பெண்ணா?, எப்படி இறந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story