ஒற்றை யானை அட்டகாசம்
ஒற்றை யானை அட்டகாசம்
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோவில் அருகே உள்ள விளைநிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கிருந்த 3 பனை மரங்களை சாய்த்து அதன் குருத்துக்களை சாப்பிட்டது. இந்த சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை நீண்டநேரம் அங்கு சுற்றி திரிந்தது. பின்னர் மலையடிவார புதர்களுக்குள் சென்று விட்டது.
Related Tags :
Next Story