மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம்
சிவகங்கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை முன்னாள் ராணுவ முப்படை நலச்சங்கம் மற்றும் காளையார்கோவில், மானாமதுரை முன்னாள் ராணுவ முப்படை நலச் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலப்பட்டி கிராமத்தில் மரணமடைந்த ராணுவ வீரர் பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிவகங்கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மீண்டும் அரண்மனை வாசலை அடைந்தது. அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிவகங்கை முன்னாள் ராணுவ முப்படை நலச் சங்க தலைவர் வேதராஜ், செயலாளர் சந்திரசேகரன், சிவகங்கை அரிமா சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story