வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது.

திருவள்ளூர்

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஊழியர்களை அழைத்து சென்ற ஷேர் ஆட்டோ வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த வழியாக வந்த போக்குவரத்து போலீஸ்காரர் சுதாகர் என்பவர் அந்த வழியாக சென்ற தண்ணீர் வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தார். அதன் பின்னர் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை ஊற்றி மேலும் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர்.

இதில் ஆட்டோ முழுவதும் தீயில் இருந்து நாசமானது, டிரைவர் உரிய நேரத்தில் செயல்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story