கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி


கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி
x

தச்சம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகே வேலையாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் புனிதா (வயது 14) இவர் பழையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிற்கு தண்ணீர் பிடிப்பதற்காக சென்றவர் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் உறவினர்கள் கிணற்றில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி மாணவியின் உடலை மீட்டனர்.

பின்னர் தச்சம்பட்டு போலீசார் பிணத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story