திருத்தணியில் அரசு பள்ளி மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது; மாணவர்கள் உயிர்தப்பினர்


திருத்தணியில் அரசு பள்ளி மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது; மாணவர்கள் உயிர்தப்பினர்
x

திருத்தணியில் அரசு பள்ளி மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இந்த பள்ளியில் தற்போது 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் புதிய மற்றும் பழைய கட்டிடத்தில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுவர்கள் எல்லாம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இந்த நிலையில், வழக்கம்போல் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. மதியம் 3 மணி அளவில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் மேல் பகுதியில் உள்ள சுவர் திடீரென சரிந்து விழுந்தது. மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆபத்தான முறையில் இருக்கும் பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story