குமரி மாவட்டத்தில்ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும்


குமரி மாவட்டத்தில்ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும்
x

குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கிராம சபை கூட்டம்

குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அருவிக்கரை ஊராட்சியில் தச்சூர் தேங்காபாறவிளையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அருவிக்கரை கிராம ஊராட்சி தலைவர் சலேட் கிளீட்டஸ் மேரி முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் ஜாண் கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

ரப்பர் ஆராய்ச்சி மையம்

கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.12 கோடி மதிப்பில் திற்பரப்பு, முட்டம் உள்ளிட்ட 4 பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் ெதாடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி

கூட்டத்தில் பல்வேறு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து 'எங்கள் கிராமம், ஏழில்மிகு கிராமம்' என்ற உறுதிமொழியை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, திருவட்டார் தாசில்தார் தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

12 மணி நேர வேலை சட்டம் ரத்து

கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி, தி.மு.க. போன்ற காட்சிகள் இலவசம் கொடுத்து நாட்டை சீரழித்து விட்டது என்று கூறிவிட்டு இப்போது அவர்கள் போட்டியிடும் மாநிலங்களில் இலவசத்தை அறிவித்து வருகின்றனர். இதுேபால் எல்லா வற்றிலும் இரட்டை நிலைபாடு கொண்டுள்ளனர்.

வேலை நேரத்தை 12 மணியாக உயர்த்தும் சட்டத்தை ரத்து செய்ததற்கு நிர்பந்தமோ அழுத்தமோ இல்லை. தொழிலாளர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.

கனிம வளங்கள் கடத்தல்

தென்மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்துவதை பார்த்துக்கொண்டு அதிகாரிகள் கைக்கட்டி நிற்கிறார்கள் என குற்றம் சாட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தகுதி இல்லை. குமரி மாவட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன் காலத்தில் 39 குவாரிகள் இருந்தது. இப்போது 7 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 6 செயல்படுகிறது. இது இங்குள்ள மக்களின் ேதவைக்காக செயல்படுகிறது.

ெநல்லை மாவட்டத்தில் இருந்தும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. மாநிலம் விட்டும் மாநிலம் கனிம வளம் கொண்டு செல்ல தடை செய்ய வேண்டியது மத்திய அரசின் வேலை.

திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகா அலுவலகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story