கடலூரில் அபூர்வ நிகழ்வு... உயிருடன் கரை ஒதுங்கிய மீன்களை கொத்து கொத்தாக அள்ளிச் சென்ற மக்கள்
தானாகவே மீன்கள் உயிருடன் கரை ஒதுங்குவது ஓர் அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் ராசாபேட்டை மீனவ கிராம கடற்கரையோரம் அலை அலையாய் மத்தி மீன்கள் உயிருடன் கரைக்கு துள்ளி குதித்து வர... அதைப் பார்த்த மக்கள் மீன்களை அள்ளிச் சென்றனர்... தானாகவே மீன்கள் உயிருடன் கரை ஒதுங்குவது ஓர் அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகிறது.
இதே போன்ற சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் நிகழ்ந்திருந்தாலும், இந்த அளவிற்கு மீன்கள் கரை ஒதுங்கவில்லை என கூறப்படுகிறது.
கடலுக்கு அடியில் உள்ள மீன்களின் உணவான கடல்பாசி தட்ப வெப்ப நிலை காரணமாக கலங்கலாக மேலோங்கி எழுந்து வரும் போது, மீன்களும் மேலே வரும் என்றும்... தட்பவெட்ப நிலை மாறிய பிறகு மீன்கள் மீண்டும் கடலுக்குள் சென்று விடும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story