வடபொன்பரப்பியை சங்கராபுரம் தாலுகாவுடன் இணைக்கக்கோரிமுதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்


வடபொன்பரப்பியை சங்கராபுரம் தாலுகாவுடன் இணைக்கக்கோரிமுதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வடபொன்பரப்பியை சங்கராபுரம் தாலுகாவுடன் இணைக்கக்கோரி முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் தாலுகாவில் இருந்த வடபொன்பரப்பி குறுவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட வாணாபுரம் தாலுகாவுடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் வடபொன்பரப்பி குறுவட்டத்தை வாணாபுரம் தாலுகாவில் சேர்த்ததை மீண்டும் சங்காபுரம் தாலுகாவுடன் இணைத்திட வேண்டும். வாணாபுரம் தாலுகாவுக்கான பகுதிகள் பிரிக்கப்பட்ட போது, சரியான முறையில் பிரிக்கப்படவில்லை.

இதனால் சங்கராபுரம் தாலுகா தனது வளர்ச்சியை இழந்து வரும் நிலைமை ஏற்படவுள்ளது. மேலும் வடபொன்பரப்பி குறுவட்டத்தில் உள்ள 23 ஊராட்சி மக்களுக்கும் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியாகும். எனவே மீண்டும் வடபொன்பரப்பி குறு வட்டத்தினை சங்கராபுரத்துடன் இணைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

கோரிக்கை மனு

அந்த வகையில், சங்கராபுரம் அனைத்து பொதுசேவை கூட்டமைப்பின் போராட்ட கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் சங்கராபுரம் கிளை தபால் நிலையத்தில் நடைபெற்றது.

இதற்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், செயலாளர் குசேலன் நிர்வாகிகள் சுதாகர், அசோக்குமார், விஜயகுமார், ராசா, சத்யமூர்த்தி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலையல் பதிவு தபால் மூலம் தங்களது கோரிக்கையை மனுவாக அனுப்பி வைத்தனர்.

இதில் சங்க அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story