புளியங்குடியில் நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டப்பணி
புளியங்குடியில் நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டப்பணி நடந்து வருகிறது.
தென்காசி
புளியங்குடி:
புளியங்குடி நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு தமிழக அரசின் இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை நகரசபை தலைவி விஜயா சவுந்தரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் புளியங்குடியில் உள்ள அனைத்து நகராட்சி பள்ளிகளுக்கும் இலவச காலை சிற்றுண்டி தயார் செய்யப்படும் உணவுக்கூடம், காலை உணவுகளை கொண்டு செல்லும் வாகனம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை விரைவாக முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், மேலாளர் செந்தில் வேல்முருகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story