தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
ஆலங்குளம் வட்டாரத்தில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்டாரம் கருவந்தா ஊராட்சியில் 2023-24-ம் நிதியாண்டில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கருவந்தா மற்றும் சோலைசேரி கிராமங்களில் நடந்தது.
ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் தார்பாலின், மின்கலன் மூலம் இயங்கும் தெளிப்பான், தரிசு நில தொகுப்பு திடல் அமைத்தல் குறித்து பேசினார். கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி, கருவந்தா கவுன்சிலர் பால்துரை, சோலைசேரி கவுன்சிலர் கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ், கருவந்தா ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மங்களம், வார்டு உறுப்பினர்கள் சுடலைக்கண்ணு, அமிர்தஜெயபாலன், மெர்லின் ஜெபரத்தினம், சத்யா, மல்லிகா, பேச்சியம்மாள், மாரிச்செல்வி, ெபரியசாமி, விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.