ஆறுமுகநேரியில் 108 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஆறுமுகநேரியில் 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
பொதுக்கூட்டம்
ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டது.
கடந்த 29-ந் தேதி ஆறுமுகநேரி சிவன் கோவிலில் இருந்து 11 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மெயின் பஜார் செந்தில் விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அங்கு தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலையில் ஆறுமுகநேரியில் 25 அம்மன் கோவில்களில் இருந்த விநாயகர் சிலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஆறுமுகநேரி மெயின் பஜாருக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பின்னர் எழுச்சி பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேலன், திருச்செந்தூர் ஒன்றிய ஜெகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன், ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன், அனைத்து சமுதாய வியாபாரிகள் சங்க தலைவர் செந்தமிழ் செல்வன், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவக்குமார், தலைவன்வடலி இந்து முன்னணி நிர்வாகி சீதாராமன், ஆதவா பவுண்டேஷன் நிறுவனர் பாலகுமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர துணைத்தலைவர் பொன்ராஜ் சேகர் நன்றி கூறினார்.
விநாயகர் சிலை ஊர்வலம்
தொடர்ந்து 108 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஆறுமுகநேரி பத்திரகாளி அம்மன் கோவில் நிர்வாகி அமிர்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி பஜாரில் புறப்பட்டு ஜெயின்நகர், பேயின்விளை லட்சுமிபுரம், கீழலட்சுமிபுரம், ரத்தினபுரி, காயல்பட்டினம் புதிய பஸ்நிலையம், அங்கிருந்து விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை, வழியாக திருச்செந்தூர் கடற்கரைக்கு கடலில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகள் சென்றது.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டார். மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.