குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குடம் ஊர்வலம்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குடம் ஊர்வலம்
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று 1,008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று 1,008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

முத்தாரம்மன் கோவில்

ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், ஸ்ரீ முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், 6.20 மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, 6.30 மணிக்கு 108 கலசபூஜை, உலக நன்மை வேண்டி மகா தீபாராதனையும், 6.45 மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனையும் நடந்தது.

பால்குட ஊர்வலம்

அதனை தொடர்ந்து 7 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல் நடைபெற்றது. 8.10 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு மகாதீபாராதனை, 8.30 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க 1,008 பால்குட ஊர்வலம் புறப்பட்து.

இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் மதியம் 12.20 மணிக்கு 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. அதனை தொடா்ந்து 12.30 மணிக்கு சிறப்பு மகா அன்னதானம் நடந்தது. பின்னர் 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. 108 சுமங்கலி பெண்கள் குலவையிட்டு கும்மியடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 5.10 மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு 8.10 மணிக்கு முத்தாரம்மன் தோ் பவனியும், இரவு 8.30 மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடைமாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story