வாகனம் மோதி தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலி


வாகனம் மோதி தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியானார்.

ராமநாதபுரம்

கோவில்பட்டி வடக்கு இலுப்பையூரணி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவர் மணமேல்குடியில் கடல் உணவு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று விட்டு மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ராமநாதபுரம் அருகே லாந்தை பகுதியில் வந்த போது எதிரே வந்த அடையாளம் வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயம் அடைந்த கணேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story