லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

தூத்துக்குடியில் லாரி மோதியதில் தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் லாரி மோதியதில் தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

லாரி மோதி பலி

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் காசிராம் (வயது 31). இவர் துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கணினி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கார்த்திக் காசிராம் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

துறைமுக பிரிவு சாலையில் வ.உ.சி. சிலை அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற லாரி மோதியதில் கார்த்திக் காசிராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிரைவர் கைது

உயிரிழந்த கார்த்திக் காசிராமுக்கு பிரேமா என்ற மனைவியும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசியைச் சேர்ந்த லாரி டிரைவர் செய்யது அலியை கைது செய்தனர்.


Next Story