லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது; பெரும் விபத்து தவிர்ப்பு


லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது; பெரும் விபத்து தவிர்ப்பு
x

கொடூர் கிராமத்தில் லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது. மேலும் உடனடியாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருவள்ளூர்

நெடுஞ்சாலை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து தச்சூர் கூட்டு சாலை வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது. இந்த சாலை கொடூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் கொடூரில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் மின்கம்பங்கள் அமைந்துள்ளது. நேற்று காலை கொடூர் கிராமத்தின் வழியாக அதிவேகமாக சென்ற லாரி ஒன்று சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது.

விபத்து தவிர்ப்பு

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நிற்காமல் லாரியுடன் தப்பி சென்றார். இந்த விபத்தில் மின் கம்பத்தில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை உடனடியாக துண்டித்து மின்கம்பத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலை அதிக அளவில் லாரிகள் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அவற்றை தடுக்க கொடூர் வழியாக கிருஷ்ணாபுரம் செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story