நெரிசலில் தத்தளிக்கும் தபால் அலுவலகம்
வடமதுரையில் துணை தபால் அலுவலகத்தில் போதிய இட வசதியில்லாமல் பொதுமக்கள் நெரிசலில் அவதிப்படுகின்றனர்.
வடமதுரையில், ெரயில் நிலைய சாலையில் துணை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தபால் அலுவலகத்தின் கீழ் காணப்பாடி, போஜனம்பட்டி, மோர்பட்டி, சிங்காரக்கோட்டை, வேல்வார்கோட்டை, மொட்டணம்பட்டி, கொசவபட்டி, தென்னம்பட்டி உள்ளிட்ட 10 கிளை தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த துைண தபால் அலுவலகத்துக்கு வடமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை ேசா்ந்த ஏராளமானவா்கள் தபால் சேமிப்பு திட்டங்கள், ஆதார் பதிவு மற்றும் திருத்தம், காப்பீடுகள், பதிவுத்தபால், விரைவுத்தபால், மின்கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை செலுத்த வந்து ெசல்கின்றனா். இந்த கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாமல் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் வடமதுரையில் தபால் அலுவலகம் எங்குள்ளது என்பது தெரியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த தபால் அலுவலகத்துக்கு வடமதுரை பஸ்நிறுத்தம் அருகே புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு இடம் ஒதுக்கி உள்ளது. ஆனால் அங்கு கட்டிடம் கட்டப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. அந்த இடத்தில் தபால் அலுவலகத்துக்கு புதிய கட்டிடத்தை விரைவில் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.