பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுகோள்


பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுகோள்
x

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சன சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். முன்னதாக துணைத்தலைவர் ராமசாமி வரவேற்றார். செயலாளர் கலியமூர்த்தி அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி வரவு-செலவு கணக்கு வாசித்தார். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறங்குவதற்கு வசதியாக அனைத்து பஸ்களும் பழைய பஸ் நிலைய கட்டிடத்தின் முகப்பில் விரும்புகின்ற பயணிகள் இறங்குவதற்கு வசதியாக நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற செயல்கள் நடக்க காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூடி அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர அரசு கவனம் செலுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story