டவுன் பஸ் சரிவர வராததால் கிராம மக்கள் மறியல் முயற்சி


டவுன் பஸ் சரிவர வராததால் கிராம மக்கள் மறியல் முயற்சி
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே டவுன் பஸ் சரிவர வராததால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே டவுன் பஸ் சரிவர வராததால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

மறியல் முயற்சி

காரைக்குடி அருகே உள்ளது நெம்மேனி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தினந்தோறும் காரைக்குடி நகருக்கு வந்து செல்கின்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் தினந்தோறும் ஒரு நாளைக்கு 6 முறை காரைக்குடியில் இருந்து நெம்மேனி கிராமத்திற்கு பஸ் வந்து செல்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பஸ் சரிவர இந்த கிராமத்திற்கு வந்து செல்லவில்லை என்றும் அந்த பஸ்சை இயக்கும் டிரைவர் முதியவர்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை இந்த கிராமத்திற்கு வந்்த பஸ்சை மறித்து மாணவர்கள், கிராம மக்கள் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர். இதுகுறித்து அறிந்த சாக்கோட்டை போலீசார் மற்றும் காரைக்குடி போக்குவரத்து கழக அதிகாரிகள் அங்கு சென்று போராட்டம் செய்ய வந்த மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

மேலும் இவ்வழியாக இயக்கப்படும் அந்த பஸ் தினந்தோறும் தவறாமல் வந்து செல்லும் எனவும், அந்த பஸ் டிரைவரை மாற்றி விட்டு புதிய டிரைவரை அனுமதிப்பதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதியளித்தனர்.

மேலும் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை குறித்து மனுவாகவும் அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story