தமிழ்நாடு உருவான வரலாற்றின் புகைப்பட கண்காட்சி


தமிழ்நாடு உருவான வரலாற்றின் புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உருவான வரலாறு மற்றும் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை தொடர்பான புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

திண்டுக்கல்

தமிழ்நாடு என்று சட்டசபையில் பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு தின விழா இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலம் கல்லூரியில் தொடங்கி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவுபெறுகிறது.

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உருவான வரலாறு மற்றும் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை தொடர்பான புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story