9 மாதம் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 9 மாதமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
திண்டிவனம்,
வளவனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் எழில் என்கிற எழிலேந்தி(வயது 41). இவர் மீதான திருட்டு வழக்கு திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் எண்-1 ல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் எழிலேந்தி திடீரென தலைமறைவானார். இதையடுத்து அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்தும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன் பேரில் திண்டிவனம் போலீசார் எழிலேந்தியை வலைவீசி தேடி வந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு காணை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து திண்டிவனம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story