உடல்நலக்குறைவால் அவதியடைந்தவர் தற்கொலை
உடல்நலக்குறைவால் அவதியடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் காலனியை சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 44). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சுப்ரமணியனுக்கு உடல்நலம் சரியில்லாததால் கடந்த 4 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் வலி தாங்க முடியாமல் அவதியடைந்து வந்த சுப்ரமணியன் கடந்த 30-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்ரமணியன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரமணியனின் தாய் நல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.