உழவர் சந்தையில் ஒரு கடையில் மட்டும் வியாபாரம்


உழவர் சந்தையில் ஒரு கடையில் மட்டும் வியாபாரம்
x

சிவகாசி உழவர்சந்தையில் ஒரு கடையில் மட்டும் வியாபாரம் நடைபெறுவதால் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி உழவர்சந்தையில் ஒரு கடையில் மட்டும் வியாபாரம் நடைபெறுவதால் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி, இஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மளிகை மற்றும் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ரேஷன் கடைகள் மூலம் ஒருவருக்கு 1 கிலோ வீதம் தக்காளி குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

விலை அதிகம்

இந்தநிலையில் சிவகாசியில் இயங்கி வரும் 101-வது உழவர் சந்தை கடந்த 10 ஆண்டுகளாக பெயரளவுக்கு தான் இயங்கி வருகிறது. இங்கு ஒரே ஒரு வியாபாரி மட்டும் வெளி மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்.

வெளிமார்க்கெட்டில் நேற்று 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை ஆன நிலையில் உழவர் சந்தையில் ரூ.95-க்கு விற்பனையானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த உழவர் சந்தையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

பெயரளவில் விற்பனை

சிவகாசி உழவர் சந்தையில் 3 அதிகாரிகள், 4 ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் ஒரே ஒரு வியாபாரி மட்டும் விவசாயி என்ற பெயரில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்.

இதனை மாற்றி அதிக அளவில் விவசாயிகள் வந்து வியாபாரம் செய்ய தேவையான நடவடிக்கையையும், பெயரளவில் இல்லாமல் முழுவதுமாக உழவர்சந்தை செயல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story