புளியங்குறிச்சி ஊராட்சி எல்லைகளில் மது விற்க, குடிக்க தடை என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை


புளியங்குறிச்சி ஊராட்சி எல்லைகளில் மது விற்க, குடிக்க தடை என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை
x

புளியங்குறிச்சி ஊராட்சி எல்லைகளில் மது விற்க, குடிக்க தடை என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் மதுப்பிரியர்கள் புளியங்குறிச்சி பஸ் நிறுத்தம், நீரோடை, பள்ளி வளாகங்களில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். மேலும் கல்வராயன் மலையில் இருந்து கடத்தி வந்த சாராயத்தையும் குடித்து வந்தனர். இதனை தடுக்க புளியங்குறிச்சி ஊராட்சியில் மது குடிக்க தடை விதிக்கவும், கிராம கட்டுப்பாடுகளை மீறி மது குடிப்பவர்கள், விற்பவர்களை போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சியில் உள்ள 4 எல்லைகளில் கிராமத்தின் நுழைவுவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் புளியங்குறிச்சி ஊராட்சியில் மது விற்க மற்றும் மது அருந்த தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் மது குடிப்பவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Next Story