தண்ணீர் தொட்டியில் விழுந்த நல்ல பாம்பு பிடிபட்டது


தண்ணீர் தொட்டியில் விழுந்த நல்ல பாம்பு பிடிபட்டது
x

ஜோலார்பேட்டை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த நல்ல பாம்பு பிடிபட்டது

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் தருமன். இவரது வீட்டின் எதிரில் உள்ள தண்ணீர் தொட்டியில் இன்று திறந்து தண்ணீர் எடுக்கும் போது பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் வசித்து வரும் சேகர் என்பவரின் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 8 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடித்தனர்.

மேலும் நாட்டறம்பள்ளி பகுதியில் பூபதி கவுண்டர் தெருவில் வசித்துவரும் காளியப்பன் என்பவரின் வீட்டின் அருகில் இருந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.


Related Tags :
Next Story