தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொடி நாள் நிதியாக ரூ.53.66 கோடி திரட்டி புதிய சாதனை - தமிழக அரசு தகவல்


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொடி நாள் நிதியாக ரூ.53.66 கோடி திரட்டி புதிய சாதனை - தமிழக அரசு தகவல்
x

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.53.66 கோடி கொடிநாள் நிதியாக திரட்டப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒவ்வோரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் நாடு முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முப்படையினை சேர்ந்த வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூறவும். அவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான கொடி நாள் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் கொடி நாள் நிதி திரட்டப்பட்டதில் தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.43.34 கோடி நிதி திரட்டப்பட்டது. இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.53.66 கோடி கொடிநாள் நிதியாக திரட்டப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் சாதனையை விட ரூ.10.32 கோடி கூடுதல் ஆகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடிநாள் 2022-க்கான நன்கொடையினை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, கொடிநாள் மலர் வெளியிட்டு கொடிநாள், நிதி அதிக அளவில் வாரி வழங்கிட தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டார்.

கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை கவர்னர் மாளிகையில் இன்று காலை கொடிநாள் நன்கொடை வழங்கி, அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கிட தமிழக மக்களை கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story