ரூ.1 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம்
தஞ்சை வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் ரூ.1 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த கட்டிடங்களை மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் திறந்து வைத்தனர்.
தஞ்சை வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் ரூ.1 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த கட்டிடங்களை மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் திறந்து வைத்தனர்.
மாநகராட்சி பள்ளி
தஞ்சை மாநகராட்சி பகுதியில் வண்டிக்காரத் தெருவில் சீனிவாசன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிக்கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டன. தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் இந்த புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதையடுத்து புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி கல்வெட்டினை திறந்து வைத்தார்.
மாணவர்கள் திறந்து வைத்தனர்
பள்ளி வகுப்பறை கட்டிடங்களை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பரணி, விக்னேஷ் ஆகியோரை கொண்டு திறந்து வைக்குமாறு கூறினார். இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மாணவர்கள் கட்டிடத்தை திறந்ததும் அங்கு கூடியிருந்த அனைவரும் கைத்தட்டி மேயரின் செயலை பாராட்டினர்.இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகரன், மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யாசரவணன், கவுன்சிலர்கள் வனிதா செல்வகுமார், சுந்தரசெந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.