பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்


பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்
x

பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் அர்ஜூனன் எம்.எல்.ஏ.மனு அளித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தீர்க்கப்படாத 10 மக்கள் பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகளை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மனுக்களாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணிகள் தொடர்பாக திண்டிவனம் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் கலெக்டர் மோகனிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

திண்டிவனம் பகுதியில் சவுக்குமரத்தை பயன்படுத்தி காகிதம் தயாரிப்பதற்கு காகித தொழிற்சாலை அமைத்து தர வேண்டும். திண்டிவனம் நகராட்சி மக்களுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் கட்டி தர வேண்டும். கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவப் பணியாளர்கள் குடியிருப்பு கட்டி தர வேண்டும்.

மரக்காணம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாக்க வேண்டும், மரக்காணம் கடற்கரை பகுதியில் கடற்கரை விளையாட்டு மையம் மற்றும் நீர் விளையாட்டு சுற்றுலா தளம் படகு குழாமுடன் அமைக்க வேண்டும். உப்பு தொழிலை மேம்படுத்தும் வண்ணம் உப்பு தொழிற்சாலை மரக்காணத்தில் உருவாக்கப்பட வேண்டும். மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட அழகன் குப்பம் முதல் முதலியார்குப்பம் வரை கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்படுவதை தவிர்க்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் மரக்காணம் மற்றும் திண்டிவனம் கிடங்கல் 2-ல் பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். மரக்காணம் ஒன்றியம் காவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கட்டிடங்கள், ஆய்வு கூடங்கள் அமைக்க வேண்டும். திண்டிவனம் ஆவணிப்பூர் ஊராட்சியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.




Next Story