கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை விற்க முயன்ற தாய்
விழுப்புரத்தில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை விற்க முயன்ற தாயை பிடித்து காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம்,
இளம்பெண்
விழுப்புரம் பஸ் நிலையத்தில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கையில் பெண் குழந்தையுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கு நின்று கொண்டிருந்த சில பயணிகளிடம் குழந்தையை விற்பதற்காக விலை பேசிக்கொண்டிருந்தார்.
இதை அங்கே ரோந்து வந்த போலீசார் பார்த்து அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதல்
விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி ஜெயா(28) என்பதும், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
இந்த நிலையில் ஜெயாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் விற்பனை செய்வதற்காக குழந்தையுடன் பஸ் நிலையத்துக்கு வந்த போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.
காப்பகத்தில் ஒப்படைப்பு
இதையடுத்து குழந்தையுடன் ஜெயாவை காப்பகத்தில் ஒப்படைத்த விழுப்புரம் தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முயன்ற பெண் போலீசாரிடம் சிக்கிய சம்பவத்தால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.