மாமல்லபுரம் கலங்கரை விளக்க உச்சியில் சுழலும் நவீன கண்காணிப்பு கேமரா
மாமல்லபுரம் கலங்கரை விளக்க உச்சியில் சுழலும் நவீன கண்காணிப்பு கேமரா
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மலைக்குன்றில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் 133 ஆண்டுகள் கடந்த புராதன சின்னமாக திகழ்கிறது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலங்கரை விளக்கங்கள் துறையின் கீழ் இந்த பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் பெற்று இதனை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதன் உச்சியில் ஏறி சென்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், பக்கிங்காம் கால்வாய், கிழக்கு வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை பார்க்கலாம். கலங்கரை விளக்கத்தை சுற்றி பார்க்க வருபவர்களை கண்காணிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு கலங்கரை விளக்கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவை பழுதடைந்துவிட்டதால் தற்போது 360 டிகிரி சுழலும் வகையில் புதிய நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா மூலம் கல்பாக்கம் அணுமின் நிலையம் வரை கண்காணிக்க இயலும். அதேபோல் கலங்கரை விளக்க நுழைவு வாயில், கடல்சார் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.