மாணவ, மாணவிகளுக்கு நவீன வாசிக்கும் கருவி


மாணவ, மாணவிகளுக்கு நவீன வாசிக்கும் கருவி
x

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

திண்டுக்கல்

நவீன வாசிக்கும் கருவி

இதுதொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளின் கற்றல் திறனில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்து, அவர்களும் பிற மாணவர்களை போன்று முழுமையாக கற்கும் வகையில் தமிழக அரசால் நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.

இந்த கருவியில், இணையதள ரேடியோ, யு.எஸ்.பி. பென் டிரைவ், மெமரி கார்டில் சேமிக்கும் வசதி, வை-பை, ஹாட்ஸ்பாட், டிஜிட்டல் அணுகக்கூடிய தகவல் அமைப்பான டெய்சி புத்தகத்தை பதிவு செய்து வாசித்தல், தமிழ் உள்பட பிற மொழிகளில் வாசித்தல், குரல் குறிப்புகளை பதிவு செய்தல், எளிதாக படிக்கவும் பேசவும் கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் என உயர் வசதிகள் உள்ளது.

இணையத்தில் பதிவு

எனவே பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04546- 252085 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அலுவலர்கள் வழங்குவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story