அரசு பள்ளியில் புகுந்து மேஜை- நாற்காலியை அடித்து நொறுக்கிய கும்பல்; 5 பேர் கைது


அரசு பள்ளியில் புகுந்து மேஜை- நாற்காலியை அடித்து நொறுக்கிய கும்பல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே அரசு பள்ளியில் புகுந்து மேஜை-நாற்காலியை அடித்து நொறுக்கிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் காலாண்டு விடுமுறை முடிந்து கடந்த 3-ந்தேதி திறக்கப்பட்டபோது, மர்மநபர்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து, வகுப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. மேலும் அங்குள்ள மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கியும், மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா புத்தகங்களை கிழித்தும் சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வல்லநாடு பகுதியை சேர்ந்த தம்பான் மகன் சிந்தாமணி (வயது 21), கோமு மகன் உத்தண்டராமன் (24), மாயாண்டி மகன் மாரியப்பன் (22), மாரிமுத்து மகன் பேச்சிமுத்து (23), இசக்கிமுத்து என்ற முத்து மகன் இசக்கிகணேஷ் என்ற கணேஷ் (22) ஆகியோர் பள்ளியில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story