பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து


பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
x

உளுந்தூர்பேட்டை அருகே பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

திருக்கோவிலூரில் இருந்து தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரி ஒன்று பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் ஜெயின்(வயது 25) என்பவர் மினி லாரியை ஓட்டி வந்தார். உளுந்தூர்பேட்டை கடைவீதியில் வந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மினி லாரி மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும் இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த சுமார் 700 லிட்டர் பால் பாக்கெட்டுகள் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் காயமடைந்த மினி லாரி டிரைவர் ஜெயினை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் கொட்டி கிடந்த பால் பாக்கெட்டுகளையும் அப்புறப்படுத்தினா். இந்த விபத்து குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story