மனைவி இறந்த துக்கத்தில் பால் வியாபாரி தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில் பால் வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் மனைவி இறந்த துக்கத்தில் பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வண்டி மலைச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகன் (வயது 29). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய மனைவி மகேஸ்வரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு அவருக்கு அடிக்கடி உடல்நிலை குறைவு ஏற்பட்டு மூளைக்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பயன் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

அதில் இருந்து முருகன் தனது மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே குளக்கரையில் உள்ள ஒரு ஆலமரத்தில் முருகன் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் விரைந்து சென்றார். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் விசாரணை நடத்தினார்.


Next Story