பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம்


பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம் தெற்கு கடையம் பஞ்சாயத்து கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு கடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை, கீழக்கடையம் பஞ்சாயத்து கூட்டமைப்புச் செயலாளர் பூமிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை (ஏ.பி.நாடானூர்), கணேசன் (பெட்டல் புதூர்), மாரியப்பன் (திருமலையப்பபுரம்), முத்தமிழ் செல்வி ரஞ்சித் (மடத்தூர்), குயிலி லட்சுமணன் (மேல ஆம்பூர்), மாரி சுப்பு (கீழ ஆம்பூர்), செண்பகவல்லி ஜெகநாதன் (துப்பாக்குடி), முகமது உசேன் (ரவணசமுத்திரம்), பிரேமா ராதா ஜெயம் (தெற்கு மடத்தூர்), முருகன் (பாப்பான்குளம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பஞ்சாயத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும். பொட்டல்புதூர் முதல் மாதாபுரம் வரை பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை மூலம் சாலைகளை அகலப்படுத்தி வாறுகால் வசதி செய்து தர வேண்டும். கடையம் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் ராமநதி, கடனாநதி அணைகளை உடனே திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தெற்கு கடையம் பஞ்சாயத்து துணை தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.


Next Story