அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்


அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்
x

நெல்லையில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன், விவசாய சங்க தலைவர் செல்லத்துரை, ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசிவிஸ்வநாதன், எச்.எம்.எஸ். சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. உமாபதிசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், சென்னையில் வருகிற நவம்பர் மாதம் 26, 27, 28-ந் தேதிகளில் நடைபெறும் பெருந்திரள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


Next Story