திருவட்டார் அருகே குளத்தில் மீன்பிடிக்க சென்ற கொத்தனார் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை


திருவட்டார் அருகே குளத்தில் மீன்பிடிக்க சென்ற கொத்தனார் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை
x

திருவட்டார் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொத்தனார்

திருவட்டார் அருகே உள்ள குட்டைகுழி புதுக்காடு வெட்டிவிளையைச் சேர்ந்தவர் அய்யப்பன், தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உண்டு. இதில் 2-வது மகன் அஜின் (வயது26). திருமணமாகாத இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அஜின் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் மாலையில் நண்பர்களுடன் அருகில் உள்ள முட்டைக்குளத்தில் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.

குளத்தில் பிணமாக...

அதன்படி நேற்று முன்தினம் அஜின் வழக்கம்போல் நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் முட்டைக்குளத்தில் அஜின் பிணமாக மிதப்பதை அவரது அண்ணன் அஜீஸ் மற்றும் நண்பர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை

பின்னர், இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து அஜின் மதுபோதையில் தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது நண்பர்களுக்குள் தகராறு காரணமாக இறந்தாரா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story