இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மார்க்கெட்


இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மார்க்கெட்
x

சாத்தூரில் மார்க்கெட் பகுதி இட நெருக்கடியில் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் மார்க்கெட் பகுதி இட நெருக்கடியில் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

குறுகலான மார்க்கெட்

சாத்தூர் மார்க்கெட் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. தற்போதுள்ள காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. கடைகளும் மிகவும் குறுகலாக உள்ளதால் வியாபாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த மார்க்கெட்டுக்கு தினமும் எண்ணற்ற பேர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள்ள வீதியும் குறுகலாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் வரும் காய்கறிகள் மார்க்கெட் கடைகளில் மிகவும் சிரமத்துடன் இறக்கி செல்கின்றனர்.

இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க மார்க்கெட்டிைன வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story