அட்டைப்பெட்டியில் இருந்த ஆண் சிசு


அட்டைப்பெட்டியில் இருந்த ஆண் சிசு
x

அட்டைப்பெட்டியில் ஆண் சிசு இருந்தது.

அரியலூர்

ஆண் சிசு

அரியலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை பூக்கார தெருவில் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே கழிப்பிடத்தையொட்டி உள்ள குப்பைகளை எடுத்து, அவர்கள் தரம் பிரித்தனர். அப்போது ஒரு அட்டைப் பெட்டியில் இறந்து போன 5 மாத ஆண் சிசு இருந்தது.

இதையடுத்து சிசுவை நாய்களிடம் இருந்து காப்பாற்ற, அந்த பெட்டியை கழிப்பிட கதவில் துப்புரவு பணியாளர்கள் தொங்கவிட்டனர். இது குறித்து துப்புரவு மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார், அரியலூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் அங்கு வந்த அரியலூர் போலீசார், ஆண் சிசுவை கைப்பற்றினர். மேலும் அந்த சிசுவை அங்கு வீசிச்சென்றது யார்? என்பது குறித்தும், அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story