பேச்சிப்பாறை அருகே மின்கம்பத்தில் மோதிய சொகுசு கார் 'ஏர் பேக்' என்ஜினீயரை காப்பாற்றியது
பேச்சிப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மின் கம்பத்தில் மோதியது. இதில் காரில் உள்ள "ஏர் பேக்" என்ஜினீயரை காப்பாற்றியது.
குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மின் கம்பத்தில் மோதியது. இதில் காரில் உள்ள "ஏர் பேக்" என்ஜினீயரை காப்பாற்றியது.
மின்கம்பத்தில் மோதிய கார்
பேச்சிப்பாறை அருகே கடம்பன் மூடு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (வயது 27). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் பிரதீஷ்குமார் சொந்த ஊருக்கு வந்தார்.
அவர் நேற்று காலையில் தனது சொகுசு காரை எடுத்துக் கொண்டு குலசேகரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது ஷீட் பெல்ட் அணிந்திருந்தார். அந்த கார் பொன்னியாகுளம் என்ற இடத்தில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் மின்சார கம்பமும் ஒடிந்து விழுந்தது.
"ஏர் பேக்" காப்பாற்றியது
இந்த விபத்தில் கார் மோதிய வேகத்தில் அதிலுள்ள பாதுகாப்பு அம்சமான "ஏர் பேக்" வெளியே வந்து பிரதீஷ்குமாரை காப்பாற்றியது. இதனால் அவர் காயமின்றி தப்பினார்.
இந்த விபத்து குறித்து பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.