மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகிற 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி-வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் அநேக இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் மீண்டும் வருகிற 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Related Tags :
Next Story