லாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் லாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம்-தூத்துக்குடி சாலையின் அருகில் நெல்லை- திருச்செந்தூர் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் வயல் பகுதிகளில் டிப்பர் லாரிகள் மூலம் மண் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து பிரிவு) முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ராமஜெயம், அரிகரபாலன், சங்கர், பழனி, மணிகண்டன் ஆகியோர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story